ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த ‘மிராய்’ திரைப்படம் |’Mirai’ movie joins Rs.100 crore club

சென்னை,
நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான ‘மிராய்’ தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும்.
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். வித்தியாசமான கதையில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் மிக நன்றாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்களிடையே தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்து வருகிறது. அதன்படி இப்படம் 5 நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.