பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது|Veteran actress M.N. Rajam to receive lifetime achievement award

சென்னை,
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வருகிற 21-ம் தேதி நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக அவரை சந்தித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் விழாவுக்கு அழைப்பு விடுத்தனர்.
எம்.என்.ராஜம் 1950 முதல் 1960-ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தார். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அலிபாபாவும் 40 திருடர்களும், அரங்கேற்றம் உள்ளிட்ட 200 படங்கள் நடித்திருக்கிறார்.
பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் சமீபத்தில் 90-வது பிறந்த நாளை கொண்டாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.