பிடித்த தனுஷ் படங்கள்…மனம் திறந்த சாய் அபயங்கர் |Sai Abhyankkar lists his favourite Dhanush films

பிடித்த தனுஷ் படங்கள்…மனம் திறந்த சாய் அபயங்கர் |Sai Abhyankkar lists his favourite Dhanush films


சென்னை,

தனுஷ் நடித்துள்ள ”இட்லி கடை” படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14-ம் தேதி சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர்களுடன் சில விருந்தினர்களும் கலந்துகொண்டனர். அதில், இசையமைபாளர் சாய் அபயங்கரும் ஒருவர்.

அப்போது மேடையில் சாய், தனக்கு பிடித்த தனுஷ் படங்களை கூறினார். அவர் பேசுகையில், “என்னுடைய பிளே லிஸ்டில் தனுஷ் சாரின் பாடல்களால்தான் அதிகம். அவரின் வட சென்னை, அசுரன், பொல்லாதவன், படிக்காதவன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகியவை எனக்குப் பிடித்த படங்கள். அவருடைய படங்களுக்கு இசையமைக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

சமீபத்தில், பிரதீப் ரங்கநாதனின் ”டியூட்” படத்தில் இருந்து தான் இசையமைத்து பாடிய ‘ஊரும் பிளட்’ பாடலின் அன்பிளக்டு வெர்சனை சாய் அபயங்கர் வெளியிட்டார். இதனை தனுஷ் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *