தர்ஷன் நடிக்கும் “காட்ஜில்லா” படத்தின் பூஜை

சென்னை,
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். இவர் ‘கூகுள் குட்டப்பா’ மற்றும் ‘நாடு’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து வரவேற்பை பெற்றது. அதனைதொடர்ந்து இவரது நடிப்பில் சமீபத்தில் ‘சரண்டர்’ என்ற படம் வெளியானது.
கவுதமன் கணபதி இயக்கத்தில் விக்டர் குமார் தயாரிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சரண்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தர்ஷன் மோகன் குரு செல்வா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஆல்யா மானசா, கேபிஒய் வினோத், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளார்.
இந்த புதிய படத்திற்கு “காட்ஜில்லா” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளார். இந்த நிலையில், இப்படத்திற்கான பூஜை விமர்சையாக நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.