அன்புவை அடித்து உதைத்த மகேஷ்.. அதிர்ச்சியில் ஆனந்தி! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் மகேஷுக்கு தெரியாமல் எல்லோரும் மறைத்து வந்தனர்.
ஆனால் ஒரு வழியாக அந்த விஷயம் மகேஷுக்கு தெரியவந்துவிட்டது. (ஆனால் அதற்கு தான் காரணம் என அவருக்கே தெரியாது.. கதை அப்படி)
அன்புவை உதைத்த மகேஷ்
ஆனந்தியை கர்பமாக்கியது அன்பு தான் என நினைக்கும் மகேஷ் நேராக சென்று மித்ராவை பளார் என அறைகிறார். ஆனந்தி பற்றிய விஷயத்தை தன்னிடம் இருந்து மறைத்ததற்காக அறைந்ததாக அவர் கூறுகிறார்.
மேலும் அன்புவின் வீட்டுக்கே சென்று எல்லோர் முன்னிலையில் மகேஷ் அன்புவை தாக்குகிறார். ப்ரோமோவை பாருங்க.