ரீ-ரிலீஸில் 25வது நாளை கொண்டாடும் “கேப்டன் பிரபாகரன்”

ரீ-ரிலீஸில் 25வது நாளை கொண்டாடும்  “கேப்டன் பிரபாகரன்”


சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 1979-ம் ஆண்டு வெளியான ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தன.ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம் தான் விஜய்காந்திற்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது. இந்த படத்தில் சரத்குமார், மன்சூர் அலி கான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் பிரபாகரன்’ படம் 34 ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி ரீ-ரிலீஸானது. இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்துடன் பார்த்தார். படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த பிரேமலதா, “‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் கேப்டன் மாவீரன் போல் நடித்துள்ளார். இப்ப எடுத்த படம் போல் இருக்கிறது. மாவீரனுக்கு மனைவியாக வாழ்ந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.

கேப்டன் பிரபாகரன் திரைப்படம், ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 24 நாட்களில் சுமார் ரூ.35 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘கேப்டன் பிரபாகரன்’ படம் இன்று ரீ-ரிலீஸில் 25வது நாளில் அடியெடுத்துவைத்துள்ளது. படக்குழு இதை புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *