1000 கோடியை விட்டுட்டு வராரு.. என் ஓட்டு விஜய்க்கு தான்: பிரபல நடிகர்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிர பணிகளில் இறங்கி இருக்கிறார். முதல் முறையாக மக்களை சந்திக்க நேரடியாக நேற்று சென்றார் விஜய்.
திருச்சியில் தொடங்கிய அவரது பிரச்சாரத்தை பார்க்க அதிகம் ரசிகர்கள் கூடியது குறிப்பிடத்தக்கது.
1000 கோடியை விட்டுட்டு வராரு
இந்நிலையில் பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் விஜய் பற்றி பேசி இருக்கிறார்.
விஜய் உச்ச நடிகராக 1000 கோடிகள் சம்பாதித்துவிட்டு, சினிமாவிலேயே இருக்காமல், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அரசியலுக்கு வந்திருக்கிறார்.
2026 தேர்தலில் நான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன், ஏன் என்றால் ஒரு மாற்றம் தேவை என நினைக்கிறேன் என பப்லு கூறி இருக்கிறார்.