சாய் பல்லவியின் முதல் பாலிவுட் படம்…ரிலீஸ் தேதி இதுவா?|Sai Pallavi’s first Bollywood film…Release date announced

சாய் பல்லவியின் முதல் பாலிவுட் படம்…ரிலீஸ் தேதி இதுவா?|Sai Pallavi’s first Bollywood film…Release date announced


சென்னை,

நடிகை சாய்பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பெயர் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

ஆரம்பத்தில், இந்தப் படத்திற்கு ”ஏக் தின்” என்று பெயரிடப்பட்டு நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ”மேரே ரஹோ” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் நவம்பர் 7 ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சுனில் பாண்டே இயக்கத்தில் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் நடித்திருக்கும் இந்த படத்தை அமீர் கான் மற்றும் மன்சூர் கான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இது மட்டுமில்லாமல் பாலிவுட்டில் சாய்பல்லவி ”ராமாயணம்” படத்திலும் நடித்து வருகிறார். 2 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *