நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிசூடு: உயிரோடு இருக்க முடியாது என கொலை மிரட்டல்

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிசூடு: உயிரோடு இருக்க முடியாது என கொலை மிரட்டல்


தெலுங்கில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘லோபர்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. தொடர்ந்து ‘எம்.எஸ்.தோனி- தி அன்டோல்டு ஸ்டோரி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இதனைதொடர்ந்து பாலிவுட் திரை உலகில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி நகரில் உள்ள நடிகை திஷா பதானியில் வீட்டின் முன் இன்று அதிகாலை இருவர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். பலமுறை துப்பாக்கி நடத்திய நிலையில், வானத்தை நோக்கியும் சுட்டுள்ளனர்.

இந்து துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுப்படுத்தியதற்காக திஷா படானி வீடு மீது துப்பாக்கி சூடு நடத்திபப்ட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், “வீரேந்திர சரண், மகேந்திர சரண் ஆகியோர் துப்பாக்கிசூடு நடத்தினர். நாங்கள் அதை செய்தோம். எங்களுடைய மதத்திற்குரிய துறவிகளை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்த முயன்றார். எங்களுடைய தெய்வங்ளை இழிவுப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது வெறும் டிரைலர்தான். அடுத்த முறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *