'கும்கி 2' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான படம் ‘கும்கி’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது பிரபு சாலமன் – சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து ‘கும்கி 2’ படத்தில் பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. ‘கும்கி2’ படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகம் ஆகிறார்.
நேற்று ‘கும்கி 2’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. அதில், படம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.