சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடிக்கும் “கார்மேனி செல்வம்” டீசர் வெளியீடு

சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடிக்கும் “கார்மேனி செல்வம்” டீசர் வெளியீடு


இயக்குநர்களாக அறிமுகமாகி, நட்சத்திர நடிகர்களாக உயர்ந்திருக்கும் சமுத்திரக்கனி – கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதையின் நாயகர்களாக இணைந்திருக்கும் ‘கார்மேனி செல்வம்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே இவர்கள் இணைந்து ரத்னம் என்ற படத்திலும் நடித்துள்ளனர். சமுத்திரகனி பிறமொழி படங்களில் நடித்து வருகிறார்

இயக்குநர் ராம் சக்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்மேனி செல்வம்’ எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி , கவுதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திர மௌலி, ரெடின் கிங்ஸ்லி, படவா கோபி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார். தீபாவளி திருநாளை முன்னிட்டு படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பயணத்தைப் பற்றிய படைப்பு என்பதும், இதில் ‘சில பயணங்கள் உங்களை வெகு தூரம் அழைத்துச் செல்லும். மற்றவை உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்’ என்ற வாசகத்தை இடம்பெறச் செய்திருப்பதால் மறக்க இயலாத – மறக்க முடியாத பயண அனுபவத்தை இப்படைப்பு விவரிப்பதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. இதுவே படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்கிறது.

இந்நிலையில் ‘கார்மேனி செல்வம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *