ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த அனிருத்

திருப்பதி,
தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான மதராஸி படத்திற்கு இசையமைத்திருந்தார். அதனை தொடர்ந்து ஜனநாயகன், ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், இசையமைப்பாளரான அனிருத் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் கொடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்ததும் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.