‘லோகா’ படத்தின் முக்கிய அறிவிப்பு.. இன்று மாலை வெளியாகிறது

சென்னை,
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா. இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
‘லோகா’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து படக்குழு இப்படத்தை இந்தி மொழியிலும் வெளியிட்டுள்ளனர்.
‘லோகா’ திரைப்படம் உலகளவில் ரூ 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது . வேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த 2 ஆவது மலையாள சினிமா என்ற சாதனையை ‘லோகா’ திரைப்படம் படைத்துள்ளது.
இந்த நிலையில், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள லோகா திரைப்படத்தின் முக்கிய அறிவிப்புகளை “தி வேர்ல்ட் அப் லோகோ ரிவீல்ஸ் இட்ஸ் சீக்ரெட்ஸ்” (The world of Lokah reveals its secrets) என்ற பெயரில் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ‘லோகா’ யுனிவர்ஸில் உள்ள புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.