‘லியோ’ இல்லையெனில் நான் லோகாவில் இடம்பெற்றிருக்க முடியாது- நடன இயக்குனர் சாண்டி | Without ‘Leo’, I wouldn’t have been in Loka

‘லியோ’ இல்லையெனில் நான் லோகாவில் இடம்பெற்றிருக்க முடியாது- நடன இயக்குனர் சாண்டி | Without ‘Leo’, I wouldn’t have been in Loka


சென்னை,

நஸ்லென், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான படம் ‘லோகா அத்தியாயம் 1’. இப்படம் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றதுடன் ரூ.200 கோடிக்கு மேல் வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது. படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கேரக்டர் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அந்த அளவுக்கு வில்லன் கேரக்டரில் நடித்திருந்த பிரபல நடன இயக்குனரான சாண்டி கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், லியோ படத்தில் இருந்து தான் லோகா பயணம் ஆரம்பித்தது. லியோ படத்தில் என் கதாபாத்திரம் இல்லையெனில் இன்று நான் லோகாவில் இடம்பெற்றிருக்க முடியாது. லோகா படத்தின் இயக்குநர் டொமினிக் லியோ படம் பார்த்த பிறகு தான் லோகாவில் என்னை நடிக்க வைக்க முடிவு செய்தார்.

லோகா வெற்றி பெறும் என்றும் எனது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், படம் சூப்பர்ஹிட் அடித்து, என் கதாபாத்திரத்திற்கு இப்படியொரு வரவேற்பு கிடைக்கும் என்பது எனக்கு சர்ப்ரைஸ் ஆகத்தான் இருக்கிறது.

லோகா சாப்டர் 1 கிளைமாக்சில் நான் இறப்பது போன்று தான் கதை முடிந்திருக்கிறது. ஆனால், கதையின் படி காட்டேரிக்கு மரணமே கிடையாது. அவர்களை கத்தியால் குத்தி சாகடிக்க முடியும். ஆனால், அவர்களது உடலில் இருந்து கத்தியை எடுத்தால் அவர்கள் மீண்டும் உயிர்பெற்று வருவார்கள். இப்படித் தான் லோகா யூனிவர்சில் எழுதப்பட்டு இருக்கிறது. நிச்சயம் காட்டேரிகள் உயிர்பெற்று வரும். ஆனால், அது எப்போது நடக்கும் எந்த பாகத்தில் இதற்கான காட்சிகள் இடம்பெறும் என்பது தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *