”அந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை” – நடிகை ரித்திகா நாயக்|”I want to play those kinds of characters”

சென்னை,
நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான ‘மிராய்’ தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், நடிகை ரித்திகா தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் குறித்து பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், ”எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிற எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க நான் ரெடி. சூப்பர் ஹீரோ படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அனுமான் எனக்கு ரொம்பப் பிடித்த படம். ஆக்சன், காதல் படங்கள்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச வகைகள்” என்றார்.