‘வாழ்க்கை ரெயில் பயணம் போல’- காதல் தோல்வியை குறிப்பிடும் ஆஸ்னா சவேரி |’Life is like a train journey’

சென்னை,
‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘கன்னித்தீவு’, ‘எம்.ஐ.3′ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ஆஸ்னா சவேரி. பளபள மேனியும், கலகல பேச்சுமாக ரசிகர்களை கவர்ந்த ஆஸ்னா சவேரி, அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி படங்கள் நடிக்கவில்லை. இந்த நிலையில் ஆஸ்னா சவேரி மீண்டும் தமிழில் படங்களில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் அவர் தெரிவித்துள்ள சில கருத்துகளை ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கிறது. “வாழ்க்கை என்பது ரெயில் பயணம் போல. சில ரெயில்கள் சரியான நேரத்துக்கு வந்தாலும், அதில் பயணிக்க மனம் தயங்குகிறது. சில ரெயில்கள் தவறான வழியில் நம்மை அழைத்து சென்றுவிடுகிறது. நமக்கான ரெயில் தாமதமானாலும், வந்தே தீரும். அதில் பயணிப்பதே நல்லது”, என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஆஸ்னா சவேரி காதல் தோல்வியை சந்தித்ததாக கூறப்படும் நிலையில், அவரது இந்த பதிவு பல்வேறு யூகங்களை கிளப்பியிருக்கிறது.