அப்படி செய்திருந்தால்…அந்த தமிழ் படம் ரூ.1,000 கோடியை எளிதாகத் தாண்டியிருக்கும் – சிவகார்த்திகேயன் |If they had done that…that Tamil film would have easily crossed Rs. 1,000 crore

அப்படி செய்திருந்தால்…அந்த தமிழ் படம் ரூ.1,000 கோடியை எளிதாகத் தாண்டியிருக்கும் – சிவகார்த்திகேயன் |If they had done that…that Tamil film would have easily crossed Rs. 1,000 crore


சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மதராஸி படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுவரை எந்த தமிழ் படமும் ரூ.1,000 கோடி வசூலிக்காதநிலையில், அதை பற்றி சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் கூறுகையில்,

”பல தமிழ் படங்கள் ரூ.1,000 கோடியை எட்டத் தவறிவிட்டன. பெங்களூரு அல்லது மும்பை அளவுக்கு நாம் டிக்கெட் கட்டணம் வசூலித்திருந்தால், ஜெயிலர் படம் ரூ. 800 – 1000 கோடியை எளிதாகத் தாண்டியிருக்கும். அதற்காக டிக்கெட் விலை அதிகரிப்பை நான் ஆதரிக்கவில்லை.

ஆனால் படத்திற்கு வட இந்திய ஆதரவும் தேவை. தமிழ் சினிமா அந்த இடத்தை விரைவில் அடையும் என்று நான் நம்புகிறேன், சில ஆண்டுகளில் ரூ.1,000 கோடியை எட்டும் ” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *