Many people are working to bring down the film “Pataiyanda Maveera” – Director Gauthaman | “படையாண்ட மாவீரா” படத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பலர் செயல்படுகிறார்கள்

Many people are working to bring down the film “Pataiyanda Maveera” – Director Gauthaman | “படையாண்ட மாவீரா” படத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பலர் செயல்படுகிறார்கள்


சென்னை,

கடந்த 1998-ம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘கனவே கலையாதே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் வ.கவுதமன். இரண்டாவது படமாக 2010-ம் ஆண்டு வெளியான ‘மகிழ்ச்சி’ படத்தை இயக்கினார். தற்போது வி.கே. புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ‘படையாண்ட மாவீரா’ படத்தை இயக்கி படத்தின் நாயகனாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக் குழுவினர் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இயக்குநரும், நடிகருமான வ. கவுதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக வெளியிடுகிறோம். இந்தப் படத்தின் தயாரிப்பில் பங்களிப்பு செய்ய ஏன் ஒப்புக்கொண்டேன் என்றால், காடுவெட்டி குரு அப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்டவர்.” என்றார்.

இயக்குநர் கவுதமன் பேசுகையில், “வரலாறாக நின்ற ஒருவனின் வரலாறை சொல்லும் போது தான், இந்த மண்ணில் இருள் மண்டி கிடக்கிற குப்பையும், கூளங்களும், அழுக்குகளும் அகற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் ‘படையாண்ட மாவீரா’. இந்தப் படைப்பை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மறைமுகமாக பலர் செயல்படுகிறார்கள். நான் இதுவரை எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. என்னுடைய தந்தையும், காடுவெட்டி குரு தந்தையும் ஒன்றாக கல்வி கற்றவர்கள். எனக்கும், அவருக்கும் நல்ல நட்பு மட்டுமல்ல, புரிதல் மட்டுமல்ல, பேரன்பும் இருக்கிறது. அறம் கொண்டவர்களை இந்த மண்ணில் வீழ்த்த முடியாது. வேண்டுமானால் சில காலம் வரை மறைக்கலாம். ஆனால் மீண்டும் எழுந்து வருவார்கள்.

மேதகு பிரபாகரனை வாழ்க்கை வரலாற்றை படைப்பாக உருவாக்க வேண்டும். ஏனெனில் தமிழ் இனத்தின் வரலாறை அனைவருக்கும் உரக்கச் சொல்ல வேண்டும். தமிழினத்தின் எதிரிகளை மண்டியிடச் செய்ய வேண்டும். ‘படையாண்ட மாவீரா’ படைப்பு வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *