ரவி மோகன் இயக்கும் “அன் ஆர்டினரி மேன்” படத்தின் புரோமோ அப்டேட்

சென்னை,
ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார். தற்போது பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடித்துவரும் ரவி மோகன், சமீபத்தில் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் மூலம் ‘புரோ கோட்’ திரைப்படத்தை முதலில் தயாரித்துள்ளார். அடுத்ததாக ரவி மோகன் இயக்கும் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற டைட்டில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு ‘அன் ஆர்டினரி மேன்’ படத்தின் புரோமோ வீடியோ வெளியாகவுள்ளது.