Actress Anaswara Rajan celebrated her birthday by cutting a cake on the set| படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அணஸ்வரா ராஜன்

சென்னை,
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கிறார். மலையாள நடிகை அணஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கிறார். ஷான் ரோல்டன் இப்படத்துற்கு இசையமைக்கிறார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் பூஜையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ்ராஜ், அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், சசிகுமார், ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், நடிகை அணஸ்வரா ராஜன் பிறந்தநாளையொட்டி படக்குழு அணஸ்வராவுக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.