சிரியாவில் உள்ள ரஷ்ய வீரர்களின் தலைவிதி என்னவாகும்? புடினின் செய்தித்தொடர்பாளர் கூறிய விடயம்

சிரியாவில் உள்ள ரஷ்ய வீரர்களின் தலைவிதி என்னவாகும்? புடினின் செய்தித்தொடர்பாளர் கூறிய விடயம்


சிரியாவில் உள்ள ரஷ்ய ராணுவத் தளங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். 

டார்டஸ் கடற்படைத் தளம்


அசாத் ரஷ்யாவிற்கு தப்பியோடிய பின்னர் சிரிய மக்கள், தாங்கள் அனுபவித்த துயரங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.




கடந்த வாரம் ரஷ்ய தூதர்கள், டார்டஸ் கடற்படைத் தளம் மற்றும் க்மெய்மிம் விமானத் தளம் உட்பட சிரியாவில் இருந்து ஒரு முழுமையான ரஷ்ய விலகல் சாத்தியம் என்று ஊடகத்திடம் கூறினர். 

russian military bases fate in syria



மேலும், ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் முன்பு, அசாத் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.



இறுதி முடிவுகள்

இந்த நிலையில் அங்குள்ள ரஷ்ய ராணுவ தளங்களின் நிலை குறித்து புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.



அவர் கூறுகையில், “இது குறித்து இறுதி முடிவுகள் எதுவும் இல்லை. நாட்டின் நிலைமையை இப்போது கட்டுப்படுத்தும் சக்திகளின் பிரதிநிதிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். 




டார்டஸ் கடற்படைத் தளம் மற்றும் க்மெய்மிம் விமானத்தளம் ஆகியவை முன்னாள் சோவியத் யூனியனுக்கு வெளியே ரஷ்யாவின் ஒரே இராணுவப் புறக்காவல் நிலையங்களாகும். மேலும் இவை ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் கிரெம்ளினின் நடவடிக்கைகளுக்கு முக்கியமானவை ஆகும்.




ஆனால், ரஷ்யாவின் நீண்டகால கூட்டாளியான அசாத் ஒரு அதிர்ச்சி கிளர்ச்சி தாக்குதலில் வெளியேற்றப்பட்டது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என கூறப்படுகிறது.     

Dmitry Peskov

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *