“யோலோ” படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது

சென்னை,
மிஸ்டர் மோஷன் பிச்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், உருவாகியுள்ள படம் யோலோ. இந்த படத்தினை இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம் இப்படத்தை இயக்கியுள்ளார். மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், பேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்த படத்தில் தேவ் நாயகனாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, கலைக்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற 12ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதற்கிடையில்,சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.