''பராசக்தி'' படத்தில் ''பாகுபலி'' நடிகர்?…ரகசியத்தை உடைத்த சிவகார்த்திகேயன்

சென்னை,
துபாயில் நடந்த சைமா 2025 நிகழ்ச்சியில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டை பகிர்ந்து கொண்டார். அவர் பாகுபலி பட நடிகர் ரணாவுடன் நடித்துள்ளதாக கூறினார். படத்தின் பெயரை அவர் வெளிப்படுத்தவில்லை என்றாலும், அது”பராசக்தி” என்று கூறப்படுகிறது.
முன்னதாக நடந்த இப்படத்தின் பொள்ளாச்சி படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீலீலாவுடன் ராணாவும் கலந்துகொண்டிருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் அதனை உறுதிப்படுத்தியதாக தெரிகிறது. ராணாவுக்கு என்ன கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதுமட்டுமில்லாமல், ராணா , தேஜா சஜ்ஜாவின் மிராயிலும் நடித்துள்ளதாக வதந்திகள் உள்ளன, இப்படம் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய படங்களில் ஒன்றாகும்.