தம்பிதுரை இயக்கத்தில் உருவான ‘கோல்ட் கால்’ படம்

அறிமுக இயக்குனர் தம்பிதுரை இயக்கத்தில் கேசவ மூர்த்தி தயாரிப்பில் உருவாகும் படம் ‘கோல்ட் கால்’. படம் பற்றி இயக்குனர் தம்பிதுரை கூறுகையில், ‘கோல்ட் கால் இன்றைய பார்வையாளர்களோடு ஆழமாக இணையும் ஒரு கதை. தலைப்பு டீசர் என்பது சஸ்பென்ஸ், நகைச்சுவை டிராமா ஆகியவை படத்தின் சிறு சுவையை மட்டும் தருகிறது’ என்றார்.
தயாரிப்பாளர் கேசவமூர்த்தி கூறும் போது, கோல்ட் கால்-ன் தலைப்பு டீசரை அனைவருடனும் பகிர்வதில் நாங்கள் மிகுந்த உற்சாகம் கொண்டுள்ளோம். இந்த படத்தை உயிர்ப்பிக்க படக்குழு உழைத்துள்ளது. டீசர் ஒரு துவக்கமே. ‘கோல்ட் கால்’ படம் சில மாதங்களில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறப்போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






