"மதராஸி" படம்- நடிகர் வித்யுத் ஜம்வாலின் ஸ்பெஷல் புரோமோ வெளியீடு

சென்னை,
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘மதராஸி’. இந்த படத்தில் ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் வித்யுத் ஜம்வால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ராந்த், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். துப்பாக்கி கலாச்சாரத்தை அழிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.12 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் நடிகர் வித்யுத் ஜம்வாலின் ஸ்பெஷல் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.