இயக்குநராகும் கென் கருணாஸ்

2019ம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக கென் கருணாஸ் நடித்து இருந்தார் . இவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது. அதைத் தொடர்ந்து வாத்தி மற்றும் விடுதலை 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். மேதகு என்ற படத்தை இயக்கி சலசலப்பை உருவாக்கிய இயக்குனர் கிட்டு அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘சல்லியர்கள்’. இப்படத்தின் மூலம் கென் கருணாஸ் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது கென் கருணாஸ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்தில் இவரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இது ஒரு பள்ளிக்கூட பின்னணியில் நடக்கும் கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாப்பாத்திரத்திலும், ஸ்ரீதேவி அப்பல்லா, அனிஷ்மா என மொத்தம் 3 கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொள்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.