If Vaiko had entered the film industry, he would be a superstar – Thambi Ramaiah | வைகோ சினிமாவில் இருந்திருந்தால் அவர்தான் சூப்பர் ஸ்டார்

நடிகர் தம்பி ராமையா பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். அதுபோல திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்டும் எழுதி இருக்கிறார். திறமையான நடிகராக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் பன்முகம் கொண்டவர். நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிகையும் அர்ஜுனின் மகளுமான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
சென்னை நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து நடிகர் தம்பி ராமையா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வைகோ குறித்துப் பேசிய நடிகர் தம்பி ராமையா, “வைகோ சினிமாவில் மட்டும் கால் பதித்திருந்தால் இந்த நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார். அவர் கண் புருவத்திற்கு, குரலுக்கு, கம்பீரத்திற்கு, அவர் மூக்கின் அழகிற்கு வைகோ தவிர வேறு யாரும் சூப்பர் ஸ்டாராக இருந்திருக்க முடியாது. அவர் சினிமாவிற்கு வந்திருந்தால் அமிதாப் பச்சனை ஓரம் கட்டியிருப்பார்.ஆனால் அவர் தேர்ந்தெடுத்த துறை அரசியல்.
ஒரு முறை மேடைக்கு வந்து பேசும்பொழுது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கையில் சிறு குறிப்புகூட இல்லாமல் வைகோ பேசிய பேச்சு அந்த விழாவில் கலந்துகொண்டிருந்த ரஜினிகாந்த்தையே வியக்க வைத்துவிட்டது. இன்று அவரின் பரிணாம வளர்ச்சியாகத்தான் தம்பி துரை வைகோவைப் பார்க்கிறேன். அவர் நான் பெரியாரையும் வணங்குவேன். பெருமாளையும் வாங்குவேன் என்கிறார். இதுதான் பரிணாம வளர்ச்சி. வாழ்க்கையை நெறிப்படுத்துவது, முறைப்படுத்துவது எல்லாம் ஆன்மீகம்தான்” என்று பேசியிருக்கிறார்.