படத்திற்கு ஷோ இல்ல, பேனர் கீழிறங்க.. வேதனையுடன் பேசிய காந்தி கண்ணாடி படத்தின் இயக்குநர்

படத்திற்கு ஷோ இல்ல, பேனர் கீழிறங்க.. வேதனையுடன் பேசிய காந்தி கண்ணாடி படத்தின் இயக்குநர்


காந்தி கண்ணாடி

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி குக் வித் கோமாளி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதிலும் இடம்பிடித்தவர் பாலா. இதையெல்லாம் தாண்டி இவர் செய்து வரும் உதவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல கோடி கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் கூட செய்யாமல் இருக்கும் உதவிகளை பாலா செய்து வருகிறார்.

படத்திற்கு ஷோ இல்ல, பேனர் கீழிறங்க.. வேதனையுடன் பேசிய காந்தி கண்ணாடி படத்தின் இயக்குநர் | Gandhi Kannadi Director Shocking Statement



பாலா நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்திருக்கும் திரைப்படம் காந்தி கண்ணாடி. இப்படத்தை இயக்குநர் ஷெரிஃப் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ரணம் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பாலாவுடன் இணைந்து நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா ஆகியோர் நடித்திருந்தனர்.

வேதனையுடன் பேசிய ஷெரிஃப்



நேற்று வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், படத்திற்கு பல தடங்கல்களும் வருவதாக அப்படத்தின் இயக்குநர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

படத்திற்கு ஷோ இல்ல, பேனர் கீழிறங்க.. வேதனையுடன் பேசிய காந்தி கண்ணாடி படத்தின் இயக்குநர் | Gandhi Kannadi Director Shocking Statement



“படத்திற்கு ஷோ இல்லனு சொல்லி போன் வருவது. ஏன் எதுக்குன்னு தெரியல. சில தியேட்டரில் பேனர் கூட வைக்க விடல, கீழிறங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. சார் நான் வந்து 50 பைசா 1 ரூபாய்க்கு போஸ்டர் ஒட்டுன பையன் சார். பாலா காரைக்கால்ல இருந்து சினிமா கனவோடு ஓடி வந்த பையன் சார். ஏன் அடிக்குறாங்க, எதுக்கு அடிக்கிறாங்கனு தெரியல. சாத்தியமா புரியல. அதுக்கு செலவு பண்ற காச, வேற எதுக்காவது நல்ல விஷயத்துக்கு செலவு பண்ணுங்க. எங்கள அடிக்கணும்னு தோணுச்சுனா நேரல வந்து செவுல ரெண்டு அடி கூட அடிச்சிட்டு போங்க. படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துருக்காங்க. அதுக்கு ரொம்ப நன்றி” என ஆதங்கத்துடன் பேசியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *