விஜய் கடுமையான உழைப்பாளி – இயக்குநர் மிஷ்கின் | Vijay is a hard worker

வேலூர்,
வேலூரில் இயக்குநர் மிஷ்கின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நான் முழுவதும் சினிமாவில் பணியாற்றி வருகிறேன். அரசியலை பற்றி எதையும் முழுமையாக கூறியது இல்லை. சினிமாவில் இருக்கும் வரை விஜய்யை தம்பி என அன்பாக அழைப்பேன். தம்பி விஜய் இப்போது அரசியல் கட்சித் தலைவராகிவிட்டார்.
அதனால் எனக்கும், அவருக்கும் உள்ள உறவே வித்தியாசமாக உள்ளது. ஆகையால் அரசியல் கருத்து எதுவும் சொல்லமாட்டேன். என்னைப் பொறுத்தவரை விஜய் கடுமையான உழைப்பாளி. ரொம்ப நல்ல மனுஷன். இதுதான் எனக்கு தெரியும்; அரசியலாக இதை முலாம் பூச வேண்டாம்.
நாங்கள் கிராமங்களில் வாழும்போது எங்கள் தெருவில் ஒரு ஆண் நாய், ஒரு பெண் நாய் மட்டும் இருக்கும். அது எங்களை பத்திரமாக பார்த்துக்கொண்டது. எப்படி மனிதர்கள் கருத்தடை செய்து கொள்கிறார்களோ, அதைபோல நாய்களுக்கும் கருத்தடை செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. அதனாலே நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாய்களால் மக்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். இழப்புகளும் ஏற்படுகின்றன. உயிர்வதை கொடுமையானது. அதேநேரத்தில் நாய்களாலும் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் வேண்டும். இந்த விஷயத்தில் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.