“இட்லி கடை” படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், இட்லி கடை படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுதொடர்பாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.