சிறுவயதில் ஆபாச புத்தகம் படிக்கும்போது அம்மாவிடம் சிக்கினேன்- இயக்குனர் மிஷ்கின் | I was caught by my mother while reading a pornographic book as a child

சென்னை,
காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேட் கேர்ள்’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. படத்தின் டீசரில் சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும், இது பாலியல் குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்சார் தரப்பில் இருந்து பல காட்சிகளை நீக்க வேண்டும் என கூறியதால், படக்குழு நீதிமன்றம் சென்று போராடி படத்திற்கு சென்சார் வாங்கி, படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. படம் வருகிற 5ம் தேதி வெளியாகிறது.
படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது அதில் வெற்றி மாறன் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தை மூடப்போவதாக அறிவித்தார். அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு பேசும் போது, “நான் 17-வயது இருக்கும் போது 3 காம புத்தகங்களை வாங்கி அம்மாவிற்கு தெரியாமல் மறைத்து வைத்து படித்தேன். என் அம்மா மார்க்கெட் சென்று வந்த பிறகு நான் ஆபாச புத்தகங்கள் படிப்பது என் அம்மாவிற்கு தெரிந்துவிட்டது. அதை அவள் எடுத்து மேஜையின் மீது வைத்தாள். அப்பொழுது என் தாயை கடவுளாக பார்த்தேன். இதுவே அந்த 17 வயது சிறுவன் ஒரு பெண்ணாக இருந்தால் ஒரு தாய் அவளை அப்படி வளர்க்க மாட்டாள், நாம் பெண்ணிற்கு அந்த சுதந்திரத்தை கொடுக்கவில்லை.” என கூறினார்.