திருமணமான பிறகு எனக்கு 3 குழந்தைகள் வேண்டும்..!- நடிகை ஜான்வி கபூர் | I want 3 children after marriage..!

மும்பை,
நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரை உலகில் பல படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த் மல்கோத்ராவுடன் இணைந்து அவர் நடித்த பரம சுந்தரி படம் கடந்த 29-ந்தேதி திரைக்கு வந்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ 7.37 கோடியும், உலகளவில் ரூ.10 கோடியும் வசூலித்து உள்ளது.
இந்நிலையில் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், திருமணமான பிறகு எனக்கு 3 குழந்தைகள் வேண்டும். ஏனென்றால் 3 எனது அதிர்ஷ்ட எண் ஆகும். என் இரண்டு குழந்தைகள் சண்டை போடும்போது மூன்றாவது குழந்தை அவர்களை சமாதானப்படுத்தும். இதனால் மூன்று குழந்தைகளுக்கும் ஒரு துணையும் ஆதரவும் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜான்வி கபூர் ஏற்கனவே தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருப்பதியில் குடியேற விரும்புவதாக கூறியிருந்தார். திரை உலகை பொருத்தவரை சமீபகாலமாக நடிகைகள் பலர் திருமணம் செய்து கொண்டாலும் தாய்மை அடைவதை தவிர்த்து வருகின்றனர். குழந்தை பெற்றுக் கொண்டால் அழகு குறைந்துவிடும் என்ற எண்ணத்தில் சில நடிகைகள் தற்போது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இந்நிலையில் ஜான்வி கபூர் திருமணமாகி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.