Filmmaker Ram Gopal Varma and Manoj Bajpayee have reunited after almost three decades | 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ராம் கோபால் வர்மா

Filmmaker Ram Gopal Varma and Manoj Bajpayee have reunited after almost three decades | 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ராம் கோபால் வர்மா


ஐதராபாத்,

சர்ச்சைக்கு மிகவும் பெயர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. நாகார்ஜுனாவை வைத்து தெலுங்கில் 1989ம் ஆண்டு இவர் இயக்கிய சிவா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தெலுங்கில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று சிவா படத்தை ரீமேக் செய்திருந்தார்.அதன் பின்னர், ரங்கீலா, சத்யா, ஜங்கிள், கம்பெனி, பூத் என ஏகப்பட்ட ஹிட் படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா சூர்யா நடித்த ரத்த சரித்திரம் 2ம் பாகத்தையும் இயக்கி உள்ளார்.அமிதாப் பச்சனை வைத்து சர்க்கார் படத்தை இயக்கி உள்ளார். 2018ல் காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் எனும் ஆபாச படத்தை இயக்கி ஒட்டுமொத்த சினிமா துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின்னர், தொடர்ந்து அதே போன்ற படங்களையே இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. கிளைமேக்ஸ், நேக்கட், டேஞ்சரஸ் என பல படங்களை இயக்கி ஆர்ஜிவி வேர்ல்ட் என்பதையே புதிதாக உருவாக்கியுள்ளார். சமீபத்தில், வெளியான அவரது ‘சாரி’ திரைப்படம் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.இந்தப் படத்தில் நடிகர் மனோஜ் பாஜ்பாயி நாயகனாக நடிக்கிறார். ‘போலிஸ் ஸ்டேஷன் மெயின் பூத்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஹாரர் நகைச்சுவை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய படத்தில் நடிகை ஜெனிலியா நாயகியாக நடித்துள்ளதாகவும் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா – மனோஜ் பாஜ்பாயி இணைந்து கடைசியாக சத்யா எனும் படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *