“வாடிவாசல்” படம் குறித்து அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

சென்னை,
நடிகர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ‘வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு , படப்பிடிப்பு பணி விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ‘வாடிவாசல்’ படம் குறித்த அப்டேட் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.