ஜெய சூர்யா நடிக்கும் “கத்தனார்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம் ‘கத்தனார்’. ஹாரர் திரில்லர் படமான இதில் நாயகனாக ஜெய சூர்யாவும் நாயகியாக அனுஷ்கா ஷெட்டியும் நடிக்கின்றனர். விஎப்எக்ஸ் ஹாரர் கதை என்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. ‘ஹோம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரோஜின் தாமஸ் இயக்கும் படம் ‘கத்தனார்’. படத்தை கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். இப்படம் 15 மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஜெயசூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கத்தனார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது.