16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ”சிவா மனசுல சக்தி” கூட்டணி |’Shiva Manasula Shakti’ Combo reunites after 16 years

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ”சிவா மனசுல சக்தி” கூட்டணி |’Shiva Manasula Shakti’ Combo reunites after 16 years


சென்னை,

16 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சிவா மனசுல சக்தி’ கூட்டணி மீண்டும் இணைகிறது. எம். ராஜேஷ் இயக்கத்தில், ஜீவா நடிக்கும் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் சிவா மனசுல சக்தி. ரசிகர்கள் மத்தியில் எஸ்.எம்.எஸ். என அழைக்கப்படும் இந்த படம் பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பியது. சண்டையில் சந்தித்து கொண்ட சிவா மற்றும் சக்தி இறுதியில் எப்படி இணைந்தனர் என்பதை அழகாக சொன்ன படம் சிவா மனசுல சக்தி.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்திற்கு ஒளிப்பதிவு சக்தி சரவணன் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை விவேக் அரசன் மேற்கொண்டனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற எஸ்.எம்.எஸ். கூட்டணி 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *