அஜித்தின் முரட்டு சம்பவம் மங்காத்தா படம் வெளிவந்து 14 ஆண்டுகள்.. மொத்த வசூல் விவரம் இதோ

அஜித்தின் முரட்டு சம்பவம் மங்காத்தா படம் வெளிவந்து 14 ஆண்டுகள்.. மொத்த வசூல் விவரம் இதோ


மங்காத்தா 

நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் டாப் 5 திரைப்படங்கள் என எடுத்துக்கொண்டால், கண்டிப்பாக மங்காத்தா படம் அதில் இடம்பெறும். இன்னும் சொல்லப்போனால் அது பல அஜித் ரசிகர்களுக்கு அதுதான் டாப்பில் இருக்கும். அந்த அளவிற்கு மாபெரும் மாஸ் சம்பவத்தை தமிழ் சினிமாவில் செய்த திரைப்படம் மங்காத்தா.

அஜித்தின் முரட்டு சம்பவம் மங்காத்தா படம் வெளிவந்து 14 ஆண்டுகள்.. மொத்த வசூல் விவரம் இதோ | 14 Years Of Mankatha Movie Total Collection

இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, வைபவ், அஞ்சலி, பிரேம்ஜி, லட்சுமி ராய் என பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

மொத்த வசூல்

இந்த நிலையில், மங்காத்தா திரைப்படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மங்காத்தா திரைப்படம் வெளிவந்தபோது உலகளவில் ரூ. 80 கோடி வரை வசூல் செய்தது.

அஜித்தின் முரட்டு சம்பவம் மங்காத்தா படம் வெளிவந்து 14 ஆண்டுகள்.. மொத்த வசூல் விவரம் இதோ | 14 Years Of Mankatha Movie Total Collection

ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு பிறகு தமிழ் நாட்டில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த படத்தை கொடுத்தவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *