ரகுல் பிரீத் சிங் கழுத்தில் வித்தியாசமான பேட்ச் …என்னன்னு தெரியுமா?|Rakul preet singh spotted wellness patch neck goes viral

மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை ரகுல் பிரீத் சிங். பல படங்களில் பிஸியாக நடித்து வாரும் இவர் இந்த ஆண்டு ”மேரி ஹஸ்பண்ட் கி பிவி” படத்தின் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்தார். தற்போது அஜய் தேவ்கனின் ”தேதே பியார் தே 2” ல் நடிக்கிறார். இந்த படத்தில் ஆர் மாதவன் மற்றும் தபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரகுல் பிரீத் சிங் கழுத்தில் ஒரு வித்தியாசமான பேட்சுடன் காணப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வாருகிறது. சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் ரகுல் பிரீத் சிங் காணப்பட்டார். அப்போது ரகுலின் கழுத்தில் பேட்ச் ஒன்று இருப்பது கேமராவில் பதிவானது.
இந்த வீடியோ வைரலானநிலையில், ரசிகர்கள் அது என்ன என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அது, லைப்வேவ் எக்ஸ் 39 ஸ்டெம் செல் பேட்ச் என்று தெரிகிறது.