அல்லு அர்ஜுன் – அட்லி படத்தில் இணைந்த யோகி பாபு

சென்னை,
‘புஷ்பா 2’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அட்லீ இப்படத்தை இயக்க உள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என்கிறார்கள். ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனே இணைந்துள்ளார் என அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து இவர் அல்லாமல் இந்த படத்தில் மிருணாள் தாகூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பாக்ய ஸ்ரீ ப்ரோஸ் உள்ளிட்ட நடிகைகளிடம் இயக்குநர் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறதாக தகவல் வெளியாயின.
இந்திய சினிமாவில் இப்படியொரு கதைக்களம் வந்ததில்லை என்கிறார்கள். அந்தளவுக்கு ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளார் இயக்குநர் அட்லீ.
தற்போது இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு இணைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.