தேஜா சஜ்ஜாவின் “மிராய்” பட டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

தேஜா சஜ்ஜாவின் “மிராய்” பட டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு


நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான ‘மிராய்’ தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் இணையத்தில் கவனம் பெற்றது. இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும்.

கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான “வைப் இருக்கு பேபி” பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

ஒத்திவைப்பு வதந்திகளுக்கு மத்தியில், படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 5-ம் தேதி பல மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ‘மிராய்’ படத்தின் டிரெய்லர் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *