ஐஸ்வர்யா ரஜினி போல பிரபல நடிகை வீட்டில் நடந்த திருட்டு

ஐஸ்வர்யா ரஜினி
ஐஸ்வர்யா, சூப்பர் ஸ்டார் மகள் என்ற அடையாளத்தை தாண்டி தனுஷின் 3 படத்தின் மூலம் தன்னை இயக்குனராக அடையாளப்படுத்திக்கொண்டார்.
கடைசியாக இவரது இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க லால் சலாம் என்ற படம் தயாரானது.
பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான இப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை.
சினிமாவை தாண்டி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது அவரது வீட்டில் பணிபுரிந்த நபர் வீட்டில் இருந்த நகை, பணத்தை திருட்டி சென்றது பரபரப்பை கிளப்பியது.
நடிகை வருத்தம்
தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் ஒரு நடிகைக்கு நடந்துள்ளது. திரைப்படங்கள், தொலக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்துள்ள குஷி முகர்ஜி வீட்டில் தான் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது.
பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி தனது வீட்டில் பணியாற்றிய பணியாளர் ஒருவர் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் நடிகை புகார் அளிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.