‘I have written the story imagining Vijayakanth sir as a villain’ – Pa. Ranjith|’விஜயகாந்த் சாரை வில்லனாக கற்பனை செய்து கதை எழுதியிருக்கிறேன்’

‘I have written the story imagining Vijayakanth sir as a villain’ – Pa. Ranjith|’விஜயகாந்த் சாரை வில்லனாக கற்பனை செய்து கதை எழுதியிருக்கிறேன்’


சென்னை,

22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போது நடைபெற்று வருகிறது. அதில், பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் திரையிடப்பட்டது. அப்போது பா.ரஞ்சித், மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றி பேசினார். இது குறித்து அவர் பேசுகையில்,

‘எனக்கு ஒரு விஷயம் நினைவிருக்கிறது. அப்போது ஏழாம் வகுப்பு படித்தேன். பள்ளியில் நடந்த விழா ஒன்றில் ஒரு நாடகத்தில் கலந்துகொண்டிருந்தேன். ஆனால், என்னால் வசனத்தை சரியாக சொல்ல முடியவில்லை. இதனால், ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலுக்கு என்னை நடனமாட வைத்தார்கள். நான் நன்றாக நடனமாடியதால், ” ஒன்ஸ் மோர்” என்றனர்.

பின்னர் நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது கதை எழுத ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் விஜயகாந்த் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை வில்லனாகக் கற்பனை செய்து கூட கதைகள் எழுதியிருக்கிறேன்’ என்றார்



admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *