இந்தியர்கள் இனி இந்த நாட்டுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: தயாராகும் திட்டம்

இந்தியர்கள் இனி இந்த நாட்டுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: தயாராகும் திட்டம்


2025 இளவேனிற்காலத்திலிருந்து, இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்கும் திட்டம் ஒன்றைக் கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியர்கள் இனி விசா இல்லாமல் பயணிக்கலாம்

2023ஆம் ஆண்டு, ஆகத்து மாதத்திலிருந்து, இந்தியர்கள் இ விசா மூலம் ரஷ்யா செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்களில் அந்த விசாவைப் பெற்றுவிடலாம்.

இந்தியர்கள் இனி இந்த நாட்டுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: தயாராகும் திட்டம் | Russia Likely Begin Visa Free Travel Indians 2025

2024 இளவேனிற்காலத்திலிருந்தோ, விசா இல்லாமலே இந்தியர்கள் ரஷ்யாவுக்கு பயணிக்கும் வகையிலான திட்டம் ஒன்றைக் குறித்து ரஷ்யாவும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரு தரப்பு சுற்றுலாப்பயணிகள் குழுக்களாக சுற்றுலா செல்ல வசதியாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், அது தொடர்பான ஒப்பந்தம் குறித்து ரஷ்யாவும் இந்தியாவும் ஏற்கனவே விவாதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *