பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரன் நடிக்கும் “குமாரசம்பவம்” முதல் சிங்கிள் வெளியானது

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரன் நடிக்கும் “குமாரசம்பவம்” முதல் சிங்கிள் வெளியானது


சென்னை,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக இறங்கியுள்ளார். இப்படத்திற்கு குமாரசம்பவம் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஒருபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. படத்தை இசையை அச்சு ராஜமணி மேற்கொள்ள, ஒளிப்பதிவு ஜெகதீஷ் செய்துள்ளார்.

இப்படத்தை வீனஸ் இன்பொடெயின்மெண்ட் நிறுவனம தயாரித்துள்ளது. இதற்கு முன் இந்த நிறுவனம் யாத்திசை திரைப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையின் படத்தின் முதல் சிங்கிளான ‘விடியாத இரவொன்று.’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *