பராசக்தி படத்தில் முக்கிய ரோலில் 90ஸ் ஹீரோ.. அட இவரா

பராசக்தி
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பராசக்தி. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
முதல் முறையாக இப்படத்தில் ஜெயம் ரவி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ஸ்ரீலீலா, அதர்வா, பேசில் ஜோசப் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களை தவிர நடிகர் ராணா டகுபதி இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
90ஸ் ஹீரோ
இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்தில் கேமியோ ரோலில் 90ஸ் ஹீரோ ஒருவர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை நடிகர் அப்பாஸ் தான். 90ஸ் காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அப்பாஸ்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். பராசக்தி படத்தில் கேமியோ ரோலில் நடித்து வரும் அப்பாஸ், ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.