மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி- சசிகுமார் | Thank you to everyone who supported the great change

மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி- சசிகுமார் | Thank you to everyone who supported the great change


சென்னை,

‘கத்துக்குட்டி’, ‘உடன் பிறப்பே’ போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘நந்தன்’ . உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டினர்.

இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 79-வது சுதந்திர தினத்தில் தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றி இருக்கிறார்கள். மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் ‘நந்தன்’ சார்பில் நன்றி என கூறியுள்ளார். மேலும் இந்தப் பதிவுடன் கொடியேற்றிய பஞ்சாயத்துத் தலைவர்கள் விடியோவையும் பதிவிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *