கூலி திரைவிமர்சனம்

கூலி திரைவிமர்சனம்


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தில் நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். மேலும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள கூலி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்

ஹார்பரில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை வைத்து நடத்தி வருகிறார் கிங்பின் நாகர்ஜுனா. இன்டர்நேஷனல் லெவல் டீலிங், கொலை, கொள்ளை என அனைத்தையும் செய்து வருகிறார்.

மறுபக்கம் தேவா மான்சன் வைத்து நடத்தி வரும் ரஜினிகாந்த், அவருடைய வாழ்க்கையில் 30 வருடங்களுக்கு முன் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனால் அதிலிருந்து தள்ளி வாழ்ந்து வருகிறார்.

இந்த சமயத்தில் ரஜினியின் நெருங்கிய நண்பரான சத்யராஜ் மரணமடைகிறார்.

இவருடைய மரணம் இயற்கை ஆனது என அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கும் நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை ரஜினிகாந்த் கண்டு பிடிக்கிறார்.

இதற்கு யார் காரணம் அதை கண்டு பிடிப்பேன் என சத்யராஜ் மகள் ஸ்ருதி ஹாசனிடம் கூறிவிட்டு, அதற்காக வேலைகளை துவங்குகிறார்.

சத்யராஜ் கிங்பின் நாகர்ஜூனாவிற்காக வேலை பார்த்து வந்துள்ளார்.

அந்த சமயத்தில்தான் அவருடைய மரணம் நிகழ்ந்துள்ளது. இதனால் நாகர்ஜூனாவின் இடத்திற்கு செல்லும் ரஜினிகாந்துக்கு என்ன கிடைத்தது? சத்யராஜின் மரணத்திற்கு என்ன காரணம்? உண்மையாகவே ரஜினிகாந்த் யார்? என்பதற்காக படத்தில்தான் மீதி படம்..

படத்தை பற்றிய அலசல்

ரஜினிகாந்த் தனது வழக்கமான ஸ்டைலுடன் மாஸாக நடித்துள்ளார். அதில் அவர் எந்த குறையும் வைக்கவில்லை. அதே போல் வில்லன் நாகர்ஜுனா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

இவர்களை விட படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியவர் என்றால் அது, நடிகர் சௌபின் சாஹிர்தான். முதல் காட்சியில் இருந்து தன்னுடைய ஒவ்வொரு ஷாட்டிலும் நடிப்பால் பட்டைய கிளப்பியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரை போலவே ஸ்ருதி ஹாசன் மற்றும் ரசித்தா ராம் ஆகியோர் தங்களது ரோலில் தனித்து நிற்கிறார்கள்.

இவர்களை தவிர்த்து படத்தில் வந்த அனைத்து கதாபாத்திரத்திலும் நம்முடன் கொஞ்சம் கூட கனெக்ட் ஆகவில்லை. சத்யராஜ், உபேந்திரா, அமீர் கான் என சிறந்த நடிகர்களை சுமாரான கதாபாத்திரத்துக்கு பயன்படுத்தியுள்ளனர். அமீர் கான் கூட கேமியோ என  விட்டுவிடலாம். ஆனால், சத்யராஜ் மற்றும் உபேந்திராவின் கதாபாத்திரங்களுக்கு இன்னும் ஸ்கோப் கொடுத்திருக்கலாம் என தோன்றுகிறது.

வில்லன் கதாபாத்திரத்தை நாகர்ஜுனா சிறப்பாக செய்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்தில் வலு இல்லை. எப்போது ஒரு வில்லன் கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கிறதோ, அப்போது தான் ஹீரோவும் மாஸாக தெரிவார். அது கூலி படத்தில் மிஸ் ஆனது, படத்திற்கே மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக மாறியுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என திரைக்கதையில் எப்போது தரமான சம்பவம் செய்யும் லோகேஷ், கூலி படத்தில் நமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளார். அதே போல் படத்தின் நீளம் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் குழப்பமாகவும் இருக்கிறது. லோகேஷ் எமோஷனல் கனெக்ட் செய்து படத்துடன் நம்மை பயணிக்க செய்வார். ஆனால், கூலி படத்தில் எமோஷனல் கனெக்ட் இல்லை.

சண்டை காட்சிகள் சொதப்பல். லாஜிக்கே இல்லை. ரஜினிகாந்த் ஒரே இடத்தில் நிற்கிறார், அனைத்து ரவுடிகளும் அவரிடம் சென்று அடி வாங்கி கொள்கிறார்கள். பூஜா ஹெக்டேவின் மோனிகா பாடல் கலர்புல்லாக இருந்தாலும், அது தேவையா என்கிற கேள்வியும் எழுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு கட்டத்தில் இது லோகேஷ் படம்தானா என கேள்வியும் எழுகிறது.

பிளாஷ்பேக் காட்சிகள், 80ஸ்-க்கு நம்மை கூட்டி சென்ற விதம், அங்கு ரஜினிகாந்துக்கு வைத்திருந்த மாஸ் Movements சிறப்பாக இருந்தது. மேலும் அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

பிளஸ் பாயிண்ட்

ரஜினிகாந்த், சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன்

இடைவேளை காட்சி

பிளாஷ்பேக்

பின்னணி இசை


மைனஸ் பாயிண்ட்

திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு

சண்டை காட்சிகள்

லாஜிக் மீறல்

எமோஷனல் கனெக்ட் இல்லை 

தேவையில்லாத ஸ்டார்ஸ் கேமியோ


மொத்தத்தில் கூலி ஏமாற்றமே.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *