சமூக வலைதளத்தில் அதிக பாலோவர்ஸ்… டாப் 5 பாலிவுட் நடிகைகள் இவர்கள்தான்!|7 bollywood celebrities with massive fan following

சென்னை,
சமூக வலைதளங்களில் அதிக பாலோவர்ஸ்களைக் கொண்ட பாலிவுட் நடிகைகளின் பட்டியலில் டாப் இடத்தில் ஷ்ரத்தா கபூர், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் , தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ்களைக் கொண்டுள்ளனர். தற்போது அவர்கள் சமூக வலைதளங்களில் எவ்வளவு பாலோவர்ஸ்களை கொண்டுள்ளனர் என்பதை பற்றி காண்போம்.
ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கபூருக்கு இன்ஸ்டாகிராமில் 93 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும், எக்ஸ் பக்கத்தில் 14 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும் உள்ளனர். பேஸ்புக்கில் 39 மில்லியன் பாலோவர்ஸ்களும் உள்ளனர்.
பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ராவுக்கு இன்ஸ்டாகிராமில் 92.5 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும், எக்ஸ் பக்கத்தில் 27.2 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும் உள்ளனர். பேஸ்புக்கில் 54 மில்லியன் பாலோவர்ஸ்களும் உள்ளனர்.
ஆலியா பட்
ஆலியா பட்டுக்கு இன்ஸ்டாகிராமில் 86 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும், எக்ஸ் பக்கத்தில் 21 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும் உள்ளனர். பேஸ்புக்கில் 8.4 மில்லியன் பாலோவர்ஸ்களும் உள்ளனர்.
தீபிகா படுகோன்
தீபிகா படுகோனுக்கு இன்ஸ்டாகிராமில் 80 மில்லியன் பாலோவர்ஸ்களும், எக்ஸ் பக்கத்தில் 26 மில்லியன் பாலோவர்ஸ்களும் உள்ளனர். பேஸ்புக்கில் 47 மில்லியன் பாலோவர்ஸ்களும் உள்ளனர்.
கத்ரீனா கைப்
கத்ரீனா கைப்புக்கு 80 மில்லியன் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ்கள் உள்ளனர். பேஸ்புக்கில் 33 மில்லியன் பாலோவர்ஸ்கள் உள்ளனர்.