ரஜினிகாந்தின் 50 ஆண்டு சினிமா பயணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து|Actor Kamal Haasan congratulates Rajinikanth on his 50th year in cinema

ரஜினிகாந்தின் 50 ஆண்டு சினிமா பயணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து|Actor Kamal Haasan congratulates Rajinikanth on his 50th year in cinema


சென்னை,

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக திகழும் ரஜினிகாந்த், வருகிற 15ம் தேதியுடன் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

இந்த 50 ஆண்டுகளில் அவர் இதுவரை 170 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ‘கூலி’ அவரது 171-வது திரைப்படமாகும். இந்த நிலையில், ரஜினிக்கு திரையிலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“திரைத்துறையில் 50 வருடங்கள் நிறைவு செய்யும் நமது சூப்பர் ஸ்டாரை நான் பாசத்துடனும், பாராட்டுடனும் கொண்டாடுகிறேன். இந்தப் பொன் விழாவிற்கு ஏற்ற உலகளாவிய வெற்றியை ‘கூலி’ திரைப்படம் பெற வாழ்த்துகிறேன் ” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *