”ரஜினி நீங்கள் ஓர் அபூர்வ ராகம்” – வைரமுத்து| ”Rajini, you are a rare raga”

”ரஜினி நீங்கள் ஓர் அபூர்வ ராகம்” – வைரமுத்து| ”Rajini, you are a rare raga”


சென்னை,

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக திகழும் ரஜினிகாந்த், 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது அவர் வருகிற 15ம் தேதியுடன் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த 50 ஆண்டுகளில் அவர் இதுவரை 170 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ‘கூலி’ அவரது 171-வது திரைப்படமாகும். இந்த நிலையில், ரஜினிக்கு திரையிலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

”50 ஆண்டுகள் ஒரே துறையில் உச்சத்தில் இருப்பது அபூர்வம். ரஜினி நீங்கள் ஓர் அபூர்வ ராகம். புகழும் பொருளும் உங்கள் உழைப்புக்குக் கிடைத்த கூலி. தொடரட்டும் உங்கள் தொழில் நிலைக்கட்டும் உங்கள் புகழ்.

“இளமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது” என்று முத்து படத்தில் எழுதிய முத்திரை வரியால் வாழ்த்துகிறேன்” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *